வேலியை தாண்டி மேய்ந்த பசுவை அரிவாளால் வெட்டிய கொடூர சம்பவம் : துடிதுடித்த பசுவுடன் சென்று புகார்..!

1 September 2020, 4:10 pm
Cow - updatenews360 (1)
Quick Share

மதுரை : தனது நிலத்தில் இன்னொருவரின் பசு புல்லை மேய்ந்ததால் பசுவை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கல்மேடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் பசு ஒன்றை வளர்த்து வருகிறார். அந்தப் பசு அருகில் ஜெயசீலன் என்பவருக்கு சொந்தமான புல்களை மேய்ந்துள்ளது. இதைக் கண்ட ஜெயசீலன் பசுவை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனால், காயத்துடன் வீட்டிற்கு வந்த பசுவை பார்த்து கதறி அழுத லட்சுமி, நியாயம் வேண்டும் என கூறி பசுவை அரிவாளால் வெட்டிய ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

காயமடைந்த பசுவுடன் லட்சுமி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த பசுவை சிகிச்சைக்காக அரசு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Views: - 6

0

0