மதுரையில் ஐந்து பைசாவுக்கு பிரியாணி: சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.!!

Author: Udhayakumar Raman
22 July 2021, 2:28 pm
Quick Share

மதுரை: மதுரையில் ஐந்து பைசாவுக்கு பிரியாணி என விளம்பரம் செய்த கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மதுரை செல்லூர் பகுதியில் அக்ஷயா என்பவர் அசைவ உணவகம் ஒன்றை நேற்று திறந்துள்ளார்,இந்த நிலையில் உணவகத்திற்கு விளம்பரம் தேடும் நோக்கோடு இன்று முதல் நாள் பிரியாணி வாங்க வரும் முதல் 100 நபர்களுக்கு செல்லாத 5 பைசா இருந்தால் பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டினர், அதனைத் தொடர்ந்து காலை முதல் நீண்ட வரிசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பழைய ஐந்து பைசா உடன் காத்திருந்தனர்,இந்நிலையில் விளம்பர படுத்தும் நோக்கோடு 5 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்வதாக கூறி உரிய கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு பிரியாணி விற்பனை செய்ததற்காக கடைக்கு சீல் வைத்தனர் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் , இதுமட்டுமல்லாமல் உரிய விளக்கம் அளிக்க கோரி உரிமையாளருக்கு நோட்டீஸ் வாங்கப்பட்டுள்ளது.

Views: - 113

0

0