வியாசர்பாடியில் மாவா விற்ற நபர் கைது: 10 கிலோ மாவா பொருட்கள் பறிமுதல்

Author: Udhayakumar Raman
20 September 2021, 4:58 pm
Quick Share

சென்னை: வட சென்னை பகுதிகளில் மாவா விற்ற நபர் வியாசர்பாடியில் 10 கிலோ மாவா பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா விற்கப்படுவதாக எம்.கே.பி நகர் போலீசாரு க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எம்.கே.பி நகர் போலீசார் சர்மா நகர் எஸ்டேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிட மாக அவ்வழியாக வந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ மாவா இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் வியாசர்பாடி எஸ்.ஏ காலனி 5 வது தெருவைச் சேர்ந்த கணேஷ் என்பதும், இவர் வீட்டிலேயே ஜர்தா மாவா தயாரித்து வட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கணேஷ் மீது வழக்கு பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 96

0

0