மாரியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா

7 February 2021, 4:37 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. சாய்ந்தால் சமயபுரம் சாதித்தால் கண்ணபுரம் என்பதற்கு ஏற்ப்ப இக் கோயிலிருந்து எடுத்து உருவாக்கப்பட்டதே சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இக் கோயிலில் நடைபெறும் பூச்சொரிதழ் விழா ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் மூலநட்சத்திரத்தில் நடைபெறும். அதே போல் நிகழாண்டிலும் இக் கோயிலில் புஷ்பாபிஷேகம் என்னும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் கே.பி. அசோக்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் பல வண்ண மலர்கள் கூடைகளில் வைத்து மங்கல வாத்தியம் முழங்கியபடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, ஆதி மாரியம்மனுக்கு பூ சாத்தினர். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பூ சாத்தி தரிசனம் செய்தனர். பூச்சொரிதழ் விழாவினைத் தொடர்ந்து வரும் ம் தேதி முதல் மாசித் தேர் திருவிழா தொடங்கி தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வைபவமும், அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வாக வரும் மார்ச் ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Views: - 2

0

0