கஞ்சா விற்பனை செய்த கணவன்-மனைவி கைது :4.5 கிலோ கஞ்சா பறிமுதல்

4 July 2021, 4:55 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக கணவன்-மனைவியை கைது, அவர்களிடம் இருந்து 4.5 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

திண்டுக்கல் மாநகராட்சி 42 வது வார்டு மேட்டுப்பட்டி, பேகம்பூர், சவேரியார் பாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு புகார் வந்த நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திண்டுக்கல் நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு திண்டுக்கல் பகுதிகளில் கஞ்சா விற்பவர்களை உடனடியாக கைது செய்வதற்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர் இளஞ்செழியன் உட்பட காவல்துறையினர் 42 வது வார்டு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி மற்றும் அவரது மனைவி ஆரோக்கிய மேரி ஆகிய இருவரும் அப்பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 4.5 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் கைப்பற்றினர். இதையடுத்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 114

0

0