அரசு அங்கீகாரம் இல்லாத ஊடகத்தினர் ஊடக ஸ்டிக்கரை பயன்படுத்த அனுமதி இல்லை: தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் பேட்டி

13 September 2020, 2:13 pm
Quick Share

தூத்துக்குடி: அரசு அங்கீகாரம் இல்லாத ஊடகத்தினர் ஊடக ஸ்டிக்கரை பயன்படுத்த அனுமதி இல்லை என்றும், அவ்வாறு பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி உட்கோட்ட காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்களின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள அனைத்து ஆய்வாளர்கள் பங்குபெற்ற தீர்வு முகாமை எஸ்பி ஜெயக்குமார் இன்று துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் உடனடி தீர்வு காண்பதற்காக மாவட்டம் முழுவதும் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், புதுக்கோட்டை, விளாத்திகுளம்,மணியாச்சி, கோவில்பட்டி உள்ளிட்ட 8 சரகங்களில் முகாம் நடை பெறுவதாக தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வந்த புகாரின் அடிப்படையில் இம்முகாம் நடைபெறுவதாக குறிப்பிட்டார். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து உடனடி தீர்வு காண்பதற்காக மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் இருவரையும் அழைத்து தீர்வு காணப்பட உள்ளதாக தெரிவித்தார்.

காவல்துறையினர் அவர்களது சொந்த வாகனத்தில் மட்டுமே காவலர் என்ற ஸ்டிக்கரை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் அவர்களது உறவினர்கள் வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது. அரசு அங்கீகாரம் இல்லாத ஊடகத்தினர் ஊடக ஸ்டிக்கரை பயன்படுத்த அனுமதி இல்லை அவ்வாறு பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தார்.

Views: - 9

0

0