அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு

Author: Udhayakumar Raman
20 October 2021, 6:29 pm
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சர்கள் சி.வி.கணேசன் மற்றும் ஐ.பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை அமைச்சர் சி.வி. கணேசன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்களையும் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், தமிழகத்தில் மொத்தம் 90 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளதாகவும், ஒவ்வொரு தொழிற் பயிற்சி நிலையத்திலும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து மையங்களிலும் மாணவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக உள்ளதா ? என்றும், ஒவ்வொரு தொழில் பயிற்சி நிலையத்திலும் மாணவர்களுக்கு தேவையான இட வசதி, குடிநீர் வசதி, ஆய்வக வசதி உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு,

எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் என்னென்ன தேவைகள் உள்ளது என்பதை முழுமையாக கணக்கெடுத்து அந்த ஆய்வறிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றினை நிறைவேற்றி தருவதாக கூறினார். வருங்கால இளைஞர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பினை வழங்கிட வேண்டும் என்பதே தமிழக முதல்வரின் நோக்கமாக உள்ளது என்றும், தொழில் பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடிந்தவுடன் திறன் மேம்பாட்டு துறை உருவாகியுள்ளதாகவும், அதன் மூலம் தொழிற்கல்வி கற்று வரும் மாணவர்கள் அவர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக இந்தத் துறை அவர்களுக்கு பல பயிற்சிகளை கொடுக்கும் என்றும் கூறினார். தற்பொழுது அனைத்து தொழில் பயிற்சி மையங்களிலும் மாணவர் சேர்க்கை அதிகமாகவே உள்ளது.

குறிப்பாக திண்டுக்கல்லில் தையல், ஃபேஷன் டெக்னாலஜி, கார்மெண்ட்ஸ் போன்ற தொழிற் படிப்புகளுக்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும் இவ்வாறு பயிலும் மாணவர்களுக்கு புது வகுப்புகள் துவங்கப்படும் என்றும் கூறினார். கட்டிட வசதி இல்லை என்றால் புதிய கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் மொத்தம் 25 ஆயிரம் மாணவர்கள் தொழிற்பயிற்சி மையத்தில் பயின்று வருவதாகவும், இந்த எண்ணிக்கையை ஒரு லட்சமாக மாற்றி அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு அமைத்து தருவதே தமிழக அரசின் குறிக்கோளாக உள்ளதாகவும் கூறினார். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் பயிற்சி மையங்களையும் ஆய்வு மேற்கொண்டு கட்டிட வசதி தேவை என்றால் புது கட்டிடம் கட்டித் தரவும் ஏற்கனவே உள்ள கட்டிடங்களை புனரமைத்து தருவதற்காகவும் ஆய்வக வசதி செய்து தருவதற்காகவும் இந்த ஆய்வு மேற்கொண்டுள்ளதாக கூறினார்.

Views: - 136

0

0