சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்கிய அமைச்சர்கள்

4 September 2020, 10:54 pm
Quick Share

ஈரோடு: ஈரோடு அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்த நிவாரண உதவி தொகையினை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் நேரில் சந்தித்து வழங்கினார்

ஈரோடு மாவட்டம் புதுவலசு என்ற இடத்தில் நேற்று நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரங்கலை தெரிவித்தார் மேலும் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்திருந்தார்‌.

இதனையடுத்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள குளூர் பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் இரங்கலை தெரிவித்தனர். மேலும் முதல்வர் அறிவித்த நிவாரண தொகையாக வழங்கினர். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

Views: - 7

0

0