பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை: நீதி கேட்டு மூன்று வாலிபர்கள் தீக்குளிக்க முயற்சி

14 June 2021, 2:33 pm
Quick Share

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் படுகொலை செய்யப்பட்ட முத்துமனோ கொலை வழக்குக்கிற்கு நீதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்று வாலிபர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கைதிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் நாங்குநேரி அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த முத்துமனோ என்ற கைதி அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அஜாக்ரதையாக செயல்பட்ட 7 சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்கள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறை கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இருந்த போது சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என மறுத்து அவரது உறவினர்கள் 55 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முத்துமனோ கொலைக்கு நீதிகேட்டு நெல்லை அருகே உள்ள நாகம்மாள்புரத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆட்சியர் வளாகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 57

0

0