ஆயுர்வேத மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக்கு எதிர்ப்பு.! பல் மருத்துவர்கள் இரண்டு நாள் போராட்டம்

5 February 2021, 4:27 pm
Quick Share

கன்னியாகுமரி: மத்திய அரசின் புதிய மருத்துவ திட்ட முயற்சியை கைவிட வலியுறுத்தி பல் மருத்துவர்கள் ஆசாரிபள்ளத்தில் 2 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது.

மத்திய அரசு புதிய மருத்துவ திட்டத்தை வகுத்து உள்ள நிலையில், அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய அளவில் அரசு மற்றும் தனியார், பொது மற்றும் பல் மருத்துவர்கள் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் பல பகுதிகளில் கடந்த 1ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபடுகின்றனர். அதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இன்றும், நாளையும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இன்று காலை துவங்கிய இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறியதாவது;- டீயும் காபியும் கலந்து குடிக்க முடியாதது போல் ஆயுர்வேதத்தை அலோபதியையும் இணைத்து புதிய மருத்துவ முறையை மத்திய அரசு கொண்டு வருவதாகவும், இதனால் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டங்களை தாண்டி அலோபதி மருத்துவம் படித்து முடிக்கும் மாணவர்கள் புதிய மருத்துவ முறையால் பெரும் இடையூறுகளை சந்திக்கும் நிலை உருவாகும் எனவும் குற்றஞ்சாட்டினர்.

மயக்கவியல் நிபுணர் கள் உட்பட அதிநவீன மருத்துவ வசதிகள் இல்லாமல் ஆயுர்வேத மருத்துவர்கள் கூட அறுவை சிகிச்சை செய்யும் முறை ஏற்கத்தக்கது அல்ல எனவும் குற்றச்சாட்டினர். தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட வும் தயாராகி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Views: - 0

0

0