தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம்: சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

8 May 2021, 6:57 pm
Quick Share

சேலம்: அரசு அறிவித்த ஊர் அடங்கி தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் கண்ணீர் விட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் சேலம் அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குர்ஆனை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் என்னென்ன என்பது குறித்து சிறப்பு மருத்துவர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.நாளுக்கு நாள் குரானா நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவது வேதனைக்குரிய தாக உள்ளது அவர்களுக்கு குறிப்பாக அரசு மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள் ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகள் குறித்து விளக்கமாக கேட்டறிந்தார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் நெருப்பு பந்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் அரசு மருத்துவமனையில் மேற்கொண்டு சிறந்த கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் நோயாளிகளுக்கு அச்சமின்றி சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் மருத்துவ அலுவலர்களை கேட்டுக்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினரும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் ஆலோசனைப்படி பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் வேகமாக பரவி வரும் கொடுமுடியில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அரசு அறிவித்த ஊரடங்கின் போது தேவையின்றி யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று கண்ணீர் மல்க உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இந்த ஆலோசனையின் போது பாமக மாநகர செயலாளர் இராசரத்தினம் மற்றும் பசுமை தாயகம் மாநில துணை அமைப்பாளர் சத்ரிய சேகர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Views: - 37

0

0