வெள்ளமே வந்தாச்சு.. இனி அணை எதற்கு? அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது.. சென்னை மாநகராட்சி உத்தரவு!!

Author: Udayachandran
1 August 2021, 8:14 pm
Arumpakkam Chennai Copr Order - Updatenews360
Quick Share

அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்னன் நகரில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்பவர்களை மறுகுடியமர்வு செய்யும்வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க கூடாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

எஞ்சிய மக்கள் அனைவருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்து மறு குடியமர்வு செய்யப்படும் எனவும் கூறியுள்ளது. இதனிடையே அரும்பாக்கத்தில் ஏற்கனவே 93 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டு, மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூவம் நதியோரம் வசித்தவர்களுக்கு புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயகரமான இடத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Views: - 75

0

0