டாஸ்மாக் பாரில் போலீசார் அதிரடி சோதனை: 240 மதுபாட்டில்கள் மற்றும் 16 ஆயிரத்து 540 ரூபாய் ரொக்கம் பறிமுதல்…

Author: kavin kumar
15 August 2021, 7:31 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் டாஸ்மாக் பாரில் போலீசார் திடீர் சோதனை நடத்தியதில், அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 240 மதுபாட்டில்கள் மற்றும் 16 ஆயிரத்து 540 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தளர்வுகளுடான ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் மதுபான கடைகள் விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று விருதுநகர் சிவகாசி சாலையில் உள்ள அரசு மதுபான கடை மதுபாரில் இரண்டு பேர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர் அப்போது அங்கு வந்த சிறப்பு காவல் துறையினர் திடீர் சோதனை செய்தனர் அப்போது விற்பனைக்கு வைத்திருந்த 240 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 16 ஆயிரத்து 540 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் அங்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

Views: - 240

0

0