அரசு ஊழியர் கட்டையால் அடித்து கொலை: மர்மநபர்களுக்கு போலீசார் வலை…

7 September 2020, 9:16 pm
Quick Share

புதுச்சேரி: துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த அரசு ஊழியரை மர்ம நபர்கள் உருட்டு கட்டையால் அடித்தும் கத்தியால் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பி ஒடினர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னையாபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். அரசு ஊழியரான இவர் மோட்டார் சைக்கிளில் துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு சின்னயாபுரத்தில் உள்ள அவர் வீட்டிற்க்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது வாழைக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் கணேசனை வழிமறித்து உருட்டு கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கியும், அரிவால் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டியும் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலிசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த கணேசனை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். மேலும் இக்கொலை குறித்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பின் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஒடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Views: - 4

0

0