மாயனூர் கதவணைக்கு வரும் நீர் குறுவை சாகுபடிக்காக திறப்பு

22 June 2021, 10:59 pm
Quick Share

கரூர்: மாயனூர் கதவணைக்கு வரும் 9284 கன அடி தண்ணீர் டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக முழுமையாக அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு கடந்த 14ம் தேதி வந்தடைந்தது. இந்த தண்ணீரானது அப்படியே காவிரி ஆற்றில் முழுமையாக திறக்கப்பட்டது. அவை டெல்டா மாவட்டங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மாயனூர் கதவணைக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி 9285 கன அடி தண்ணீர் விநாடிக்கு வந்து கொண்டுள்ளது. அவை அனைத்துமே டெல்டா மாவட்டங்களுக்கு முழுமையாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. 16.72 அடி உயரம் கொண்ட இந்த கதவணையில் 13.12 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 985 கன அடி தண்ணீர் சேமித்து வைக்கும் அளவு கொண்ட தடுப்பணையில் 507.14 கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது அதிகமாக வந்து கொண்டுள்ளது.

Views: - 95

0

0