தேளுர் கிராமத்தில் மதிப்பு கூட்டுதல் மையம் திறப்பு

4 November 2020, 5:47 pm
Quick Share

அரியலூர்: தேளூரில் மதிப்பு கூட்டுதல் மையத்தை திருச்சி மண்டல வேளாண் கண்காணிப்பு பொறியாளர் திறந்து வைத்தார்.

அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் மானாவாரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டுதல் மையத்தினை திருச்சி மண்டல வேளாண் பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளர் ஹர்ஷவர்த்தன் திறந்து வைத்தார். மேலும் மாவு அரைக்கக்கூடிய இயந்திரத்தின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மானாவாரியில் சாகுபடி செய்யக்கூடிய கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்களை மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும் என்பதற்காகவே,

இவ்வகையான மதிப்புக்கூட்டு மையம் அரசின் மானியத் தொகையின் மூலம் விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவும், இதன் மூலம் விவசாயிகள் தங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை அப்படியே சந்தைகளில் விற்பதற்கு பதிலாக அதனை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் அதிக அளவில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இதனை முழுமையாக இக்குழுவில் உள்ள விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியில் அரியலூர் வேளாண் பொறியியல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.

Views: - 20

0

0