குண்டூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Author: Udhayakumar Raman
6 September 2021, 2:52 pm
Quick Share

திருச்சி: குண்டூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சி தற்போது 65 வார்டாக செயல்பட்டு வருகிறது. இதனை 100 வார்டாக விரிவாக்கத்திற்காக திருச்சி உள்ள பல்வேறு பகுதிகளை இணைப்பதற்கான முதல் கட்ட பணியினை திருச்சி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து நவல்பட்டு, சோமரசம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று குண்டூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து குண்டூர் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில் குண்டூர் மிகவும் பின்தங்கிய கிராமம் ஆகும். நாங்கள் விவசாயத்தையும் மற்றும் 100 நாட்கள் வேலையையும் நம்பியுள்ளோம். எங்கள் கிராம மக்களின் வாழ்வுரிமை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. மேலும் கிராமத்தில் ஆடு, மாடுகள் வளர்ப்பு ஒன்றே முதன்மையாக இருந்து வருகிறது. எனவே, மாநகராட்சியுடன் இணைக்ககூடாது என்று ஊராட்சி பொது மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். எனவே, எங்கள் பகுதியை மாநகராட்சியை இணைக்ககூடாது என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Views: - 102

0

0