போக்குவரத்து கழக அலட்சியத்தால் பயணிகள் அவதி…! அரசு பேருந்தில் கொட்டும் மழையில் நனைந்த படியே பயணித்த பயணிகள்….!!

Author: kavin kumar
22 August 2021, 11:42 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அரசு பேருந்தில் கொட்டும் மழையில் நனைந்த படியே பயணிகள் பயணித்த சம்பவம் பொதுமக்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து, தமிழ்நாடு அரசு கோவை மண்டல போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று இன்று கணியூர் புறப்பட்டு சென்றது. தளவாய்பட்டிணம் அருகே செல்லும் பொழுது, மழை பலமாக பெய்துள்ளது. அப்பொழுது, பேருந்து முழுவதும் மழைநீர் உள்ளே அருவி போல கொட்ட  ஆரம்பித்தது இதனால், பயணிகள் அனைவரும் மழை நீரில் நனைந்தபடியே பயணம் செய்தனர். மேலும் ,பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளில் மழைநீர் சென்றதால், சில இடங்களில் மின் விளக்குகள் அணைந்து அணைந்து எரிந்ததால் பயணிகள் பயந்து தாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர் .

ஓட்டை உடைசல் பேருந்தை கொரோனா காலகட்டங்களில் பேருந்து ஓடாத நேரத்தில் சரி செய்திருக்கலாம் என பயணிகளின் நடத்துனர் இடத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அமைச்சர் கரூர் செந்தில் பாலாஜி இதுபோன்ற பேருந்தை இயக்கிய போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா?, என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு பயணம் செய்ய இது போன்ற, பேருந்துகளை இயக்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் தாராபுரம் டூ, கணியூர் செல்கின்ற (14,சி.எ) ருரல் பஸ் டி.என்.33 எண்: 2284, இந்த எண் கொண்ட பேருந்தை இயக்கிய தாராபுரம் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Views: - 381

0

0