நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் வாக்காளர்கள்

6 April 2021, 10:27 am
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் 4,902 வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து விறுவிறுப்புடன் வாக்காளர்கள் தனது வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் ஆவடி அம்பத்தூர் உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் 4 ஆயிரத்து 902 வாக்குச்சாவடி மையங்களில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் ஆர்வமுடன் தனது வாக்கினை விறுவிறுப்புடன் செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு மையங்களில் கொரணா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு முகக் கவசங்கள் கையுறைகள் வழங்கப்பட்டு வாக்கு பதிவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Views: - 14

0

0