மாடக்குளம் கண்மாயை தூர்வார கோரி ஆட்சியரிடம் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் மனு

7 September 2020, 5:57 pm
Quick Share

மதுரை: மதுரை மாடக்குளம் கண்மாயை தூர்வார கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக மனு அளித்தனர்.

மதுரை மாடக்குளம் கண்மாய் பல வருடமாக தூர் வாராமல் இருப்பதாக கூறியும் கண்மாய் தூர்வாரினால் அந்த பகுதியில் நீர் ஆதாரம் கூடும் மேலும் அந்த பகுதி மக்கள் பயன்படும் வகையில் நீலத்தடி நீர் உயரும் என்பதால் மாடக்குளம் கண்மாய் யை தூர் வார வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தற்போது மாடக்குளம் கண்மாயில் கருவேல மரங்களும் செடிகளும் அடர்த்தியாக வளர்ந்து இருப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக கூறி மாடக்குளம் கண்மாயை தூர்வார கோரி மக்கள் நீதி மையத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Views: - 0

0

0