ஆளும் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி துணைநிலை ஆளுநரிடம் மனு: அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் பேட்டி

29 January 2021, 7:15 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் திமுக அரசு சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி கூட்டணி கட்சிகளுடன் துணைநிலை ஆளுநரிடம் மனு அளிக்கப்படும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு புதுச்சேரி அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட அரசானை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அன்பழகன், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 143 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ் திமுக அரசு இதுவரை ஒன்றை கூட செயல்படுத்தவில்லை என தெரிவித்த அன்பழகன்,

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறும் முதல்வர் நாராயணசாமியுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்றும் என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது எனவே சட்டமன்றத்தை கூட்டி முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்திய அன்பழகன், அதிமுகவின் தலைமையின் அனுமதியுடன் ஆளும் அரசு பெரும்பான்மையை சட்டமன்றத்தை கூட்டி நிரூபிக்க வலியுறுத்தி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து துணைநிலை ஆளுநருக்கு கடிதம் வழங்க உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0