பட்டாசு தாயார் செய்யும் இடங்களில் போலீசார் ஆய்வு

Author: kavin kumar
6 November 2021, 2:22 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி தமிழக எல்லையில் நேற்று நடைபெற்ற வெடி விபத்தை அடுத்து புதுச்சேரியில் பட்டாசு தாயார் செய்யும் இடங்களை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டார்.

புதுச்சேரி – தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்ட எல்லையான சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று நாட்டு பட்டாசு வெடித்து தந்தை-மகன் பலியானார்கள், அவர்கள் எடுத்து வந்த பட்டாசு ஆனது புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் வாங்கப்பட்டது என்று தெரியவந்ததை அடுத்து புதுச்சேரியில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் கோர்காடு, அரியாங்குப்பம், திருக்காஞ்சி கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளை சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

இதில் திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் இயங்கிவந்த பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையை ஆய்வு செய்து போது பட்டாசு தயாரிக்கும் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பட்டாசு தயாரிப்பதரகான மூல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என்றும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர், ஆய்வின் போது மேற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 231

0

0