குப்பைக்கூளமாக மாறிப்போன பொள்ளாச்சி அரசு மருத்துவமனை: கொசுக்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் அச்சத்தால் தவிக்கும் நோயாளிகள் …!!!

4 September 2020, 2:03 pm
Quick Share

கோவை: நெடுஞ்சாலை துறையினரால் குப்பைக்கூளமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மாறியுள்ளதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது .இதனை அடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனை அமைத்துள்ள சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக மருத்துவமனையின் மதில்சுவர்கள் இடிக்கப்பட்டன .மேலும் மருத்துவமனையை ஒட்டி இருந்த மரங்களும் வெட்டப்பட்ட நிலையில் மரம் பொள்ளாச்சி நகர்ச்சியால் ஏலம் விடப்பட்டது .இதையடுத்து வெட்டப்பட்ட மரத்தின் சிறு சிறு கிளைகள் மற்றும் இலை தலைகளை அப்புற படுத்தாமல் அப்படியே  விடப்பட்டன .

அதிலும் குறிப்பாக இக்கழிவுகள் பிரசவ வார்ட்  மற்றும் குழந்தைகள் , கர்ப்பிணிகளுக்கான  சிறப்பு பிரிவுக்கு அருகில் உள்ளதால் கர்ப்பிணிகள் குழைந்தைகள் மற்றும் தாய்மார்கள் போன்றோர் மேலும் இன்னல்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது . மேலும் கடந்த சில மதங்களாக  மழையிலும்  வெயிலும் கிடந்த அக்குப்பையில் இருந்து தற்போது துர்நாற்றம் வீச  துவக்கியுள்ளது .அதுமட்டுமின்றி  புதர் போல் காணப்படும் அக்குப்பையில் இருந்து கொசுக்கள் பரவுவதோடு அப்புதரில் பாம்பு போன்ற பல விஷ  ஜந்துக்கள் தங்கும் அபாயம் உள்ளதாக நோயாளிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கொலைகார கொரன தீவரமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் அதிகமாக வந்து செல்லும் அரசு மருத்துவமனையில்  மரத்தின் குப்பைகள் புதர் போல் தேங்கி இருப்பது மேலும் பல்வேறு  நோய்கள் பரவ வழிவகை செய்யும் என்று மக்கள் கூறியுள்ளனர்.எனவே மருத்துவ நிர்வாகமே அல்லது சிறிதும் சமூக பொறுப்பின்றி குப்பைகளை அப்படியே விட்டு சென்ற நெடுந் சாலை துறையினரோ விரைந்து அக்குப்பையை அகற்ற வழிசெய்ய வேண்டும் என்பதே நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோலாக உள்ளது.

Views: - 0

0

0