ஒப்பந்ததாரர் வெட்டி படுகொலை: குற்றவாளி கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

Author: Udayaraman
15 October 2020, 11:43 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் ஒப்பந்ததாரர் ஜீவா(48) என்பவரை நேற்றைய தினம் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் மர்ம கும்பல் வெட்டிப்படுகொலை செய்து தப்பியோடியது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் மேட்டுப்பாளையம் பகுதியை ஜீவா, காந்தி திருநல்லூர் சேர்ந்த ஜோசப் ஆகியோர் கொலை செய்ததும் மேலும் காங்கிரஸ் பிரமுகர் கண்ணன் தூண்டுதலில் பேரில் இந்த கொலை நடைபெற்றதாக தெரியவந்தது இதனையடுத்து 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு அதில் 3பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான காங்கிரஸ் பிரமுகரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட ஜீவாவின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் சாலை மேட்டுப்பாளையம் காவல் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தை அடுத்து முக்கிய குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் மேலும் கொலை செய்யப்பட்ட ஜீவாவின் குழந்தைகள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 34

0

0