இறந்துபோன வயதான பெண் பெயரில் பொங்கல் பணப்பரிசு மோசடி: மகன் ஆட்சியரிடம் ஆன்லைனில் புகார்

12 January 2021, 10:17 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இறந்துபோன வயதான பெண் பெயரில் பொங்கல் பணப்பரிசுயில் மோசடி செய்ததாக மகன் மாவட்ட ஆட்சியரிடம் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசாக ரூ 2500, வேட்டி, சேலை அரிசி, பருப்பு, முந்திரி உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளில் தமிழக அரசு பொங்கல் பரிசு, ரூ 2500 பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோட்டாறு இசங்கன்விளையை சேர்ந்தவர் பொன்னையா இவரது தாய் சுந்தரவடிவு கடந்த இரண்டு ஆண்டுக்களுக்கு முன்பாக இறந்துவிட்டார்.

கடந்த 2018ம் ஆண்டு இறந்து போன பொன்னையாவின் தாய் பெயரை கையெழுத்திட்டு ரூ 2500 கடை ஊழியர்கள் சுருட்டி உள்ளது தெரியவந்தது. வயதான பெண் இறந்து போன பின்னர் அவரது ரேஷன் கார்டுக்கு இரண்டு ஆண்டுகளாக பொருட்கள் வாங்கவில்லை. இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் ரூ 2500 பணம் வழங்கப்பட்டதாக வயதான பெண்ணின் மகன் பொன்னையாவிற்க்கு செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ரேஷன் கடையில் சென்று விசாரித்துள்ளார். அப்போது பதிவேட்டில் மூதாட்டியின் பெயரை கையெழுத்திட்டு யாரோ பணம் பெற்றிருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் பொங்கல் பரிசு மோசடியில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வலியுறுத்தி அவர் மாவட்ட ஆட்சியரிடம் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.மேலும் இதுபோன்ற மோசாடிகளில் ரேசன்கடை ஊழியர்கள் ஈடுபட்டுவந்துள்ளதும் தெரியவந்துள்ளது.மேலும் ஓவ்வொரா ரேசன்கடையிலும் அதிகாரிகள் ஆய்வுசெய்து மோசடியில் ஈடுபட்ட ஊழியர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 3

0

0