திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொன்னையா பதவியேற்பு

30 October 2020, 6:37 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக பொன்னையா இன்று பொறுப்பேற்றார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொன்னையா இன்று பொறுப்பேற்றார். முன்னதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மகேஸ்வரி ரவிக்குமார் காஞ்சிபுரம் மாவட்ட மாவட்ட ஆட்சியராக இடமாறுதல் பெற்ற நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த பொன்னையா இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். முன்னதாக அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட திட்ட இயக்குனர் லோகநாயகி உள்ளிட்டோர் மலர்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றார்.

Views: - 16

0

0