உறுப்பினர் அட்டையுடன் சசிகலாவை வரவேற்று போஸ்டர்.. தில்லு காட்டும் அதிமுக தொண்டர்கள்…

6 February 2021, 4:29 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் சசிகலாவை வரவேற்று அதிமுக தொண்டர்கள் தனது அதிமுக அடையாள அட்டையுடன் ஒட்டப்படுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே செந்நெல்குடியை சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் நான்கு பேர் சேர்ந்து அதிமுக அடையாள அட்டையுடன் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளார்கள். விருதுநகரில் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிட்டும் சின்னம்மா என்று குறிப்பிட்டும் அடிமட்ட தொண்டரும் முதல்வராகலாம் என்ற நிலையை உருவாக்கி..

சுயநலம் இல்லாமல் கழகத்தை காத்து இக்கழகம் இன்னும் நூற்றாண்டு காலம் ஆட்சி அமைத்து அம்மாவின் கனவை நினைவாக்க வருகை தரும் கழகபொதுச்செயலாளர் தியாகத் தலைவியே தொண்டர்களை காக்க… வருக தாயே என்ற வாசகம் அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.விருதுநகர் அருகே செந்நெல்குடி கிராமத்தை சேர்ந்த அக்கட்சி தொண்டர்கள் இந்த வால்போஸ்ட்டை ஒட்டி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 15

0

0