சுவற்றில் உதயசூரியன் சின்னம் வரைய அனுமதியளித்தவரை ஊரைவிட்டு தள்ளிவைப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் புகார்

Author: Udhayakumar Raman
4 August 2021, 5:31 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரம் அருகே வீட்டின் சுவற்றில் உதயசூரியன் சின்னம் வரைய அனுமதியளித்தால்,12 ஆண்டுகளாக ஊரைவிட்டு தள்ளிவைத்தாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் இறந்ததால் பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பெரியண்ணன் மகன் இன்பசேகரன் திமுக சார்பில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக பென்னாகரம் தொகுதி முழுவதும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அதே போல் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட நாகதாசம்பட்டியில் அதிமுக, பாமகவினர் அதிகம் உள்ள இந்த கிராமத்தில் 65 குடும்பத்தினர் ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். அதிமுக அதிகம் உள்ள பகுதி என்பதால் இந்த கிராமத்தில் இரட்டை இலை சின்னம் மட்டும் வரைய வேண்டும் என ஊர் கவுண்டர் ராஜ என்பவர் கட்டுபாடு விதித்துள்ளார். அதனை மீறி பிரகாஷ் என்பவர் வீட்டில் உதயசூரியன் சின்ன வரை திமுகவினர் அனுமதி கேட்டுள்ளனர்.

இதற்கு பிரகாஷ் வரைந்துகொள்ள அனுமதியளித்துள்ளார். இதற்கு அப்போது அங்குள்ள ஊர்கவுண்டர் ராஜா என்கிற செல்வகுமார் என் அனுமதியில்லாமல் உதயசூரியன் சின்னம் ஏன் வரைந்தாய் என பிரகாஷிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர்கள் நான்கு பேர் குடும்பத்தை மட்டும் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக கூறி அவர்கள் வீட்டு செல்லும் பாதையை அடைத்துள்ளனர். இது குறித்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து பாதையை அடைத்து வைக்கப்பட்ட கற்கல் அகற்றப்பட்டது. அப்போதையிலிருந்து பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர்கள் ஆகிய நான்கு குடும்பத்தினருக்கு குடி தண்ணீர் விடுவதில்லை, இவர்களின் குழந்தைகள் யாரும் பொது இடங்களில் வரக்கூடாது என தொடர்ந்து பல்வேறு இடையூர்கள் செய்துள்ளனர். இது குறித்து அப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி என்பதால், எந்த அரசு அதிகாரிகளும் அவர்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இந்த நிலையில்10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால், இந்த ஆட்சியிலாவது நடவடிக்கை எடுப்பார்கள் என உதயசூரியன் சின்னம் வரைந்தர்க்காக கடந்த 12 ஆண்டுகளாக ஊரைவிட்டு தள்ளி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்கள் கிராமத்தில் குழந்தைகள் மற்றும் தாங்களும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் குடும்பத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர்.

Views: - 148

0

0