தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பை தள்ளி வைக்க பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்

9 November 2020, 10:41 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பை 3 மாதம் தள்ளி வைக்க வேண்டுமென தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரி மாநில எல்லையான கோரிமேடு பகுதியில் அக்கட்சியின் பொருளாளர் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருக்கிறது என்றும் 2021ஆம் அண்டு கூட்டணி குறித்து டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டி தேமுதிக கூட்டணி குறித்து முடிவு கேப்டன் தான் முடிவு செய்து அறிவிப்பார் என்றார். தொடர்ந்து வேல் யாத்திரை குறித்து கருத்து தெரிவித்த அவர்,

பாஜக சார்பில் நடைபெற்று வரும் வேல் யாத்திரை அவர்களின் கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறார்கள். இதனால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்த வித பயனும் இல்லை என் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்கப்படுகிறது. இதில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். கேப்டன் மற்றும் நானும் கொரோனா குறித்து நேரடியாக உணர்ந்து இருக்கிறோம் எனவே ஒட்டுமொத்த மக்கள் மற்றும் குழந்தைக்ந்ள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பை 3மாதம் தள்ளி வைக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 20

0

0