நீலகிரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகை: பாதுகாப்பு பணியில் ஈடுபடுள்ள போலீசார்

Author: Udayaraman
1 August 2021, 5:31 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர்.

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மூன்றாம் தேதி ஜனாதிபதி நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிய உள்ளார். இதையடுத்து மாவட்டத்தில் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பு பணிக்காக அதிவிரைவுப் படையினர் ஈரோடு, மதுரை, நாமக்கல், உள்ளிட்ட 9 மாவட்டங்களிருந்து சுமார் 1300 க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அரசு கலைக்கல்லூரி மைதானத்திற்கு வந்தடைந்து மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Views: - 55

0

0