கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 18 பேர் மீது வழக்குப்பதிவு: 1 லட்சத்தி 56 ஆயிரம் அபராதம்

Author: kavin kumar
3 October 2021, 3:53 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியன்று கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 18 பேர் மீது கலால் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 1 லட்சத்தி 56 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்

புதுச்சேரியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபானம், கள் மற்றும் சாராயக்கடைகளை மூடவேண்டும் என கலால்துறை உத்தரவிட்டிருந்தது, இதனால் நேற்று அனைத்து மதுபானம், கள், சாராயக்கடைகள் மூடப்பட்டது இந்நிலையில் நேற்று கள்ளத்தனமாக மது விருப்பவர்களை பிடிப்பதற்கு கலால் துறை சார்பில் மூன்று பறக்கும் படை அமைக்கப்பட்டது, இவர்கள் புதுச்சேரி நகரம் மற்றும் கிராம பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்த நிலையில் பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, தவளக்குப்பம், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட கிரம பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானம், சாராயம் விற்பனை செய்த 18 பேர் மீது வழக்கு பதிந்து அவரிகளிடம் இருந்து 175 லிட்டர் மதுபானங்கள், 64 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மது விற்பனனையில் ஈடுப்பட்டவர்களிடமிருந்து ரூபாய் 1 லட்சத்தி 56 ஆயிரம் அபராதம் வசூலித்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Views: - 230

0

0