அரசு பள்ளிகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Author: Udayaraman
5 October 2020, 4:36 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கும் முடிவை மாநில அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் வாயலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு வரும் 8ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேகம் தீர்ப்பு வகுப்புகள் தொடங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது, இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு பள்ளிகள் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோர் பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் வாயலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி அரசு மற்றும் கல்வித்துறை செயல்படுவதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Views: - 29

0

0