கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பராமரிப்பு தொகை வழங்கல்

Author: kavin kumar
9 October 2021, 3:57 pm
Quick Share

தருமபுரி:அதியமான் கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த 45 குழந்தைகளுக்கு பராமரிப்பு தொகையாக 1 கோடியே 35 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை வள்ளல் அதியமான் கோட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சி தலைவர் திவ்யதர்சினி தலைமையில் நடைபெற்றது. தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஊராக வளர்ச்சிதுறை சார்பில், சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளுக்கு 6 கோடி 75 இலட்சம் மதிப்பிலான அரசு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.அதே போல் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் 76 விவசாயிக்கு புதிய மின் இணைப்பிற்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும் கொரோனா நோய் தொற்றில் ஒரு பெற்றோரை மட்டும் இழந்த குழந்தைகள், இரு பெற்றோரை இழந்த குழந்தைகள், பெற்றோர்களை இழந்து உறவினர்கள் ஆதரவில் உள்ள குழந்தைகள் ஆகிய 45 குழந்தைகளுக்கு பராமரிப்பு நிதி உதவியாக 1 கோடி 35 இலட்சம் ரூபாய் உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியில் திட்ட இயக்குனர் வைத்தியநாதன்,மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Views: - 180

0

0