காப்பகத்தில் மணல்களை சுமக்கும் மனநோயாளிகள்

7 February 2021, 11:09 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரியில் தனியார் மனநல காப்பகத்தில் மனநோயாளிகளை மணல்களை சுமக்க வைக்கும் அவலம் அரங்கேறியுள்ளது!!

குமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள தனியார் கல்லூரியின் பின்புறம் அடர்ந்த வனபகுதிக்குள் மன நோயாளிகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இருக்கும் 50க்கும் மேற்பட்ட மன நோயாளிகளை வைத்து பொது சாலையின் குறுக்கே 3லாரி மணல் இருப்பதை மாற்ற மனநோயாளிகளின் தலையில் சட்டி சட்டியாக மணலை சுமக்க வைத்துள்ளனர்.

மனநல காப்பக வளாகத்தில் மனநோயாளிகள் சுமந்து செல்லும் காட்சியை பார்த்த பலர் வேதனையடைந்துள்ளனர். இப்படி நீண்ட தூரம் இரக்கம் இல்லாமல் சுமக்க வைத்துள்ளனர் ,இந்த மனநல காப்பக நிர்வாகிகள் எனவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதிக பாரத்தை சுமக்க வைத்து மனநோயாளிகளை துன்புறுத்திய தனியார் காப்பக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0