4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

16 November 2020, 5:17 pm
Quick Share

தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி, ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட்டார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் போடி கம்பம் ஆண்டிபட்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 14.02.2020. அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து 1.1.2020 தகுதி நாளாகக் கொண்டு, 14.02.2020 முதல் 31.10.2020 வரையில் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் நடைபெற்ற பெயர் நீக்கம் பெயர் சேர்க்கை, திருத்தம், ஆகியவற்றின் அடிப்படையில் இன்று புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற முகாம்களின் மூலம் 11, 184, மனுக்கள் பெறப்பட்டு, 2078 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டும், 9106 மனுக்கள் வாக்காளர் பட்டியலில் சரி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் வெளியிட, உத்தமபாளையம் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணி மற்றும் பெரியகுளம் கோட்டாட்சியர் நிறைமதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சி பிரமுகர்கள். வாக்குச்சாவடிகள், வாக்காளர் பட்டியல்கள் குறித்த சந்தேகங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் பதிலளித்தார்.

தேனி மாவட்ட மொத்த வாக்காளர்கள் விபரம்:

ஆண் வாக்காளர்கள்.
5,37,988.

பெண். வாக்காளர்கள்.
5,55,329.

இதரர் (மூன்றாம் பாலினம்)
172.

மொத்தம் : 10,93,489. வாக்காளர்கள் உள்ளனார்.

Views: - 20

0

0