புதுச்சேரியில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு தடை இல்லை: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

Author: Udhayakumar Raman
4 September 2021, 2:58 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட எந்தத் தடையும் இல்லை என புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட எந்தத் தடையும் இல்லை என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியைப் போல தெலங்கானாவிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்தார். மேலும், மக்கள் கட்டுப்பாடுகளுடன் இறைவனை வணங்க வேண்டும் என நினைக்கும்போது அதற்கு அரசாங்கம் செவி சாய்ப்பதில் தவறில்லை எனக் கூறிய தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானாவில் மிக உயரமான விநாயகர் சிலையைத் திறந்துவைத்து, அந்த விழாவை தான் தொடங்கிவைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Views: - 119

0

0