ஆர்.டி.ஓ. வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 பேர்

Author: kavin kumar
17 August 2021, 4:56 pm
Quick Share

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே ஆர்.டி.ஓ. வாகனம் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 4 பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்ச்சிராக காசி செல்வி உள்ளார். இவர் தனது உதவியாளர் ஜான்சன் மற்றும் தனது வாகன டிரைவர் சக்திவேலுடன் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு ஒரு ஆய்வு பணிக்காக திண்டுக்கல்லில் இருந்து காலை 12 மணி அளவில் செம்பட்டி வழியாக நிலக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மைக்கேல் பாளையம் அருகே ரைஸ் மில் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நிலக்கோட்டை அருகே உள்ள ஒட்டுபட்டியை சேர்ந்த கிருஷ்ணன் விவசாயி நெல் அரைப்பதற்காக ரைஸ்மில் நோக்கி வந்த கிருஷ்ணன் திடீரென ரைஸ்மில் நோக்கி திருப்பினார்.

இதை சற்றும் எதிர்பாராத டிரைவர் சக்திவேல் அதிவேகமாக பிரேக் பிடித்ததால் தடுமாறிய வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த காசி செல்வி, உதவியாளர் ஜான்சன், வாகன டிரைவர் சக்திவேல், மற்றும் விவசாயி கிருஷ்ணன் சிறு, சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். நிலக்கோட்டை அருகே ஆர்.டி.ஓ. வாகனம் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 183

0

0