மழையால் சாய்ந்த வாழை : விவசாயிகள் வேதனை..!

5 August 2020, 6:00 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த சாடிவயல் பகுதியில் பலத்த காற்று,மழை காரணமாக பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்..

வானிலை மையம் எச்சரித்தன் அடிப்படையில் கோவையில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.அந்த வகையில் நேற்று இரவு கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் சாடிவயல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாரான வாழைகள் முழுவதும் சாய்ந்தன.

இதனால் விவசாயிகள் வேதனைடயடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,ஏற்கனவே ஊரடங்கால் விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட நிலையில் ,தற்போது பல நாட்கள் காத்திருந்து அறுவடைக்கு தயாரன நிலையில் வாழைகள் முழுவதும் சாய்ந்துள்ளன.இதற்கு மாநில அரசு உரிய இழப்பீட்டைக் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0