க‌லைய‌ர‌ங்க‌ம் ப‌குதியில் வருவாய் கோட்டாசிய‌ர் ஆய்வு

Author: Udhayakumar Raman
6 August 2021, 7:58 pm
Quick Share

திண்டுக்க‌ல்: கொடைக்கான‌லில் க‌லைய‌ர‌ங்க‌ம் ப‌குதியில் வருவாய் கோட்டாசிய‌ர் முருகேச‌ன் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் அதிக‌ம் கூடும் இட‌மாக‌ க‌லைய‌ர‌ங்க‌ம் ப‌குதி இருந்து வ‌ருகிற‌து .இந்நிலையில் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளின் வ‌ச‌திக்காக‌ வாக‌ன‌ நிறுத்த‌மும் இருந்து வ‌ருகிற‌து .தொட‌ர்ந்து க‌லைய‌ர‌ங்க‌ம் ப‌குதியில் அடிக்கடி போக்குவ‌ர‌த்து நெரிச‌ல் ஏற்ப‌ட்டு வ‌ந்த‌து ..இத‌னால் அப்ப‌குதியே அமைந்துள்ள‌ த‌ரைக்க‌டைக‌ளை மாற்றி அமைக்க‌ வ‌ருவாய் கோட்டாட்சிய‌ர் உத்திர‌விட்டார்.

இதில் பெரும்பாலான‌ க‌டைக‌ள் மாற்றி அமைக்க‌ப்ப‌ட்ட‌ நிலையில் மீதி உள்ள‌ க‌டைக‌ள் மாற்ற‌ப்ப‌டாம‌ல் இருந்து வ‌ந்த‌து . போக்குவ‌ர‌த்து நெரிச‌லை த‌விர்க்க‌ த‌ரைக‌டைக‌ளை மாற்றி அமைக்க‌ வேண்டுமென‌வும் வ‌ருவாய் கோட்டாட்சிய‌ர் முருகேச‌ன் க‌ட‌ந்த‌ சில‌ நாட்க‌ளுக்கு முன் ஆய்வு மேற்கொண்டார்.இத‌னை தொட‌ர்ந்து இன்றும் ஆய்வு மேற்கொண்டு க‌டைக‌ளை விரைந்து மாற்றி அமைக்க‌ உத்திர‌விட்டார்.

Views: - 108

0

0