அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட கோரி சாலை மறியல்

22 January 2021, 1:31 pm
Quick Share

திருவள்ளூர்: காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட கோரி சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் பொன்னேரி திருவொற்றியூர் சாலையில் காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியமாநில அரசுகளை கண்டித்து பேரணியாக சென்று மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீஞ்சூர் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதே போன்று சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்தா ஜெயராமன் பூவுலக நண்பர்கள் அமைப்பு திமுக சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாவட்ட பொறுப்பாளர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் காட்டுப்பள்ளி கிராம மக்களிடம் நேரில் சென்று துறைமுக விரிவாக்கப் பணிகளை ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கங்களை கேட்டு அறிந்தனர். மீனவர்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டத்தை கைவிட கோரி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர்.