அடுக்குமாடி குடியிருப்பில் மின்சார கேபிள்களை திருடிய கொள்ளையன்: லாவகமாக திருடும் சி.சி.டி.வி​. காட்சி…!

5 July 2021, 3:33 pm
Quick Share

சென்னை: புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்திருந்த ரூ. 2.5 லட்சம் மின்சார கேபிள்களை திருடிய கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையனின் சி.சி.டி.வி காட்சி வெளியாகி உள்ளது.

சென்னை திருவல்லிகேணி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பெரம்பூர் பாரதி தெரு பகுதியில் புதியதாக அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறார்.கொரோனா ஊரடங்கால் கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரது கட்டிடத்தில் வைக்கப்பட்டு இருந்த 2.5 லட்சம் மதிப்புள்ள மின்சார கேபிள்கள் மற்றும் பொருட்களை காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் கருப்பு நிற பனியன் அணிந்து மின்சார கேபிள்களை மூட்டை கட்டி எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சியை கைப்பற்றிய செம்பியம் போலீசார் அந்த நபர் யார் பழைய குற்றவாளியா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 111

0

0