பெயிண்டர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை
14 September 2020, 8:38 pmதிருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே பெயிண்டர் வீட்டில் 13 சவரன் 1,500 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டை குப்பம் பகுதியில் வசித்து வருபவர் அன்சாரி. இவரது வீட்டில் இவரது மனைவி சபீரா நியாய விலை கடைக்கு பொருட்களை வாங்கிச் சென்று திரும்பி வந்து பார்த்போது வீட்டின் பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகை 1,500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது இறைச்சிக் கடையின் கூரையை பிரித்து 69 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது குறித்து அவர் புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவினை கொண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.