கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 4 லட்சம் நூதன மோசடி: வெளி நாட்டு வாலிபர் கைது…
Author: kavin kumar8 August 2021, 3:33 pm
திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்தவருக்கு கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 4 லட்சம் நூதன மோசடி செய்த வெளி நாட்டு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் பள்ளப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலம் என்பவரிடம் முகநூலில் பழகி கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 4 லட்சம் மோசடி செய்ததாக கடந்த மாதம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவளகத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்படி சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சந்திரன், ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ், சார்பு ஆய்வாளர் ரைஹானா மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த உச்சனா(35) என்பவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
0
0