சுகாதார ஊழியர் குடும்பத்துக்கு ரூபாய் 50 லட்சம்: அமைச்சரை ஊழியர்களின் குடும்பத்தினர் சந்தித்து நன்றி

30 November 2020, 5:57 pm
Quick Share

புதுச்சேரி: பாரத பிரதமர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா பணியின் போது உயிரிழந்த சுகாதார ஊழியர் குடும்பத்துக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை ஊழியர்களின் குடும்பத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

சுகாதாரத்துறையில், முருங்கப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலிய அதிகாரி யாக பணிபுரிந்த தமிழ்ச்செல்வி ஏனாம் பொது மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீசியன் ஆக பணிபுரிந்த அக்கட்டி வெங்கட சத்ய சாய்பாபா மற்றும் அரசு பொது மருத்துவமனையில் நர்சிங் ஆர்டர்லியாக பணிபுரிந்த மோகன் ஆகியோர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொது மக்களுக்கு சேவையாற்றி கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிர் இறந்த சம்பவம் சுகாதார ஊழியர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பாரத பிரதமர் அவர்களின் அறிவிப்பின் படி ப்ரதான் மந்திரி கரிப் கல்யான் திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் வழங்கிட நடவடிக்கை எடுத்த முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு பொன்னாடை போர்த்தி தங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் போது இயக்குனர் மோகன் குமார் மருத்துவர்கள் மற்றும் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

Views: - 0

0

0