சத்தியமங்கலம் அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா: நாளை பள்ளி விடுமுறை என அறிவிப்பு..,

Author: Udhayakumar Raman
15 September 2021, 7:37 pm
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 650 மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து நாளை பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 650 மாணவிகள் பயின்று வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இன்று பள்ளியில் பயிலும் 650 மாணவிகளுக்கும் சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதன் முடிவு வெளியாகும் வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என சுகாதாரத்தறை கேட்டுக் கொண்டதன் பேரில் நாளை ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Views: - 134

0

0