திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து விபத்து

18 August 2020, 7:15 pm
Sathy Lorry Upset -Updatenews360
Quick Share

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையான திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த பாதை வழியாகத்தான் இருமாநிலங்களுக்கும் அன்றாடம் ஏராளமான சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. இன்று அதிகாலை திம்பம் மலைப்பாதை 26 வது கொண்டை ஊசி வளைவில் மைசூரிலிருந்து பொள்ளாச்சிக்கு வெண்ணெய் லோடு ஏற்றி வந்த லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றதால் சிறிய இலகுரக வாகனங்கள் சென்று வந்தன. 10 மற்றும் 12 சக்கர லாரிகள் செல்ல முடியாமல் அப்படியே நின்றன. இன்று காலை 11.00 மணியளவில் லாரி பழுது நீக்கப்பட்டு,

அப்புறப்படுத்தப்பட்டதால், ஆறு மணி நேரத்திற்கு பிறகு போக்குவயத்து துவங்கியது. இந்நிலையில் மதியம் 3.30 மணியளவில் தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி 7-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. லாரியில் இருக்கும் கரும்புகள் அகற்றப்பட்ட பின்னர், லாரி அப்புறப்படுத்தப்பட்டு இன்னும் ஒரிரு மணி நேரத்தில் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 45

0

0