காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்க ஒருநாள் இணையவழி மேலாண்மை வகுப்பு…
3 August 2020, 9:28 pmஈரோடு: சத்தியமங்கலத்தில் காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்க ஒருநாள் இணையவழி மேலாண்மை வகுப்பை காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா துவக்கி வைத்தார்.
டிஜிபி உத்தரவின் பெயரில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கண்காணிப்பில் சத்தியமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் சுப்பையா ஒருநாள் இணையவழி மன அழுத்த மேலாண்மை வகுப்பை துவக்கி வைத்தார். இதில் கொரோனா பணிச்சுமை காரணமாக காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் மன அழுத்தத்தை எவ்வாறு குறைக்க வேண்டும் என்ற பயிற்சிகள் காவலர்களுக்கு வழங்கபட்டது.
மேலும் சாத்தான்குளம் சம்பவம் போல் இனி நடைபெறாமல் தடுக்க கைதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பன குறித்த பயிற்சிகளும் வாங்கப்பட்டது. இப்பயிற்சி இன்றுமுதல் தொடங்கி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் எனவும் நாளொன்றுக்கு 20 பேர் வீதம் சத்தியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட 293 காவல்துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பயிற்சியில் காவல்துறையினர் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முககவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.