சீட்டுப்பணத் தகராறில் பெண் உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு

21 August 2020, 10:46 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரம் அருகே சீட்டுப்பணத் தகராறில் பெண் உள்பட மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே கௌரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவேரி என்பவரின் மகன்கள் பெரியண்ணன் மற்றும் முனியப்பன் ஆகியோர் அதே கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டிவந்ததாக கூறப்படுகிறது. ஏலச்சீட்டு எடுத்தவகையில் கடந்த 5 ஆண்டுகளாக பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியண்ணன் மற்றும் முனியப்பன் ஆகியோரை பழனிசாமி தரப்பினர் தாக்கியதில் காயமடைந்து பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் கௌரிசெட்டிப்பட்டி கிராமத்தில் பெரியண்ணன், முனியப்பன் மற்றும் அவரது உறவினரான ஒரு பெண் ஆகியோரை பழனிசாமி தரப்பினர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பாப்பாரப்பட்டி காவல்நிலையத்துக்கு சென்று ஏலச்சீட்டு நடத்திய பழனிசாமி தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயமடைந்த மூவரையும் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இது குறித்து பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கௌரிசெட்டிப்பட்டி கிராமத்தில் சீட்டு பணம் கேட்டதகராறில் பெண் உட்பட மூவருக்கு அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 23

0

0