இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி

Author: Udhayakumar Raman
19 September 2021, 6:55 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுவன் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல். கடந்த ஐந்து வருடமாக மும்பையில் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தோடு சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தில் தனது அண்ணன் மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கலந்து கொள்வதற்காக கதிர்வேல் மனைவி சத்தியா 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கடந்த வாரம் புது பலப்பட்டு கிராமத்திற்கு வந்தார். பின்னர் நேற்று அங்குள்ள எட்டியார் ஆற்றில் தாய் சத்தியாவுடன் ஆரியன் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது ஆற்றில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த ஆரியன் திடீரென காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் சத்தியா அக்கம்பக்கத்தினர் அழைத்துவந்து ஆற்றில் மூழ்கிய ஆரியணை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் ஆரியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து சத்தியா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் திருமால் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் ஆற்றில் மூழ்கி இறந்த ஆரியன் மும்பையில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 46

0

0