இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

6 February 2021, 9:23 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே இரண்டாவது திருமணம் செய்த இளம்பெண் 10 நாட்களுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள திருமலை பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் செங்கல் சூளையில் பணிபுரிபவர் மணி இவரது மகள் சிவரஞ்சனி (20) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பழனியை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரித்திக் (2). இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெற்றோர்கள் முன்னிலையில் விவாகரத்து செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் அவிநாசி சேவூர் அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி என்ற என்பவருடன் 2வது திருமணம் கடந்த 01.02.21 அன்று முடிந்த நிலையில்,

நேற்று முன்தினம் மூர்த்திக்கும் சிவரஞ்சனி க்கும் இடையை கருத்து வேறுபாடு காரணமாக தனது தந்தை வேலை செய்யும் செங்கல் சூளைக்கு சிவரஞ்சனி கோபித்துக் கொண்டு வந்து விட்டார். இந்நிலையில் இன்று மனமுடைந்த சிவரஞ்சனி தனது தந்தை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரண்டாம் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அலங்கியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Views: - 13

0

0